Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

50 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்களுக்கு ஆபத்து!

50 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்களுக்கு ஆபத்து!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான காட்டுத்தீ விபத்துகளை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்கள், காட்டுத்தீயால் ஏற்படும் வெப்பம் மற்றும் புகை காரணமாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 67,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஓவியங்கள் சேதமடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான காட்டுத்தீ விபத்துகளை இந்தோனேசியா எதிர்கொண்டு வருகிறது. தீவிரமடைந்த எல் நினோ காலநிலை நிகழ்வால் வெப்பநிலை அதிகரித்து, மழை குறைந்துள்ளதால், அந்நாட்டின் காடுகளும் கரிமம் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளிலும் எளிதில் தீப்பிடித்து விடுகின்றன.

இந்தப் பேரிடரால் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுலவேசி தீவிலும் காட்டுத்தீ பரவியுள்ளது. குறிப்பாக, தெற்கு சுலவேசியின் மரோஸ்–பாங்கெப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில்தான் உலகின் மிகப் பழமையான வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் காணப்படுகின்றன.

இந்தப் பகுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள ஓவியம் குறைந்தது 51,200 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சுலவேசி தீவுக்கு அருகிலுள்ள முனா தீவில் உள்ள ஒரு குகையில் காணப்படும் சிவப்பு நிறக் கை அச்சு ஓவியம் குறைந்தது 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

மரோஸ்–பாங்கெப் குகைக்கு அருகிலுள்ள பகுதியில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராடினர். தேசியப் பூங்கா மற்றும் யுனெஸ்கோவின் உலகளாவிய புவியியல் பாரம்பரியப் பகுதியாக விளங்கும் இங்குள்ள பிரம்மாண்டமான சுண்ணாம்புப் பாறை நிலப்பரப்பைச் சூழ்ந்து புகை பரவியது.

காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை ஓவியங்களின் மீது கரிப்படலத்தை உருவாக்குகிறது. இதனால் ஓவியங்கள் மறைக்கப்பட்டு, அவற்றில் உள்ள உருவங்களைத் தெளிவாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
விமானத்தை தாக்கிய மின்னல்: அலறிய பயணிகள் - என்ன நடந்தது?
அடுத்த செய்தி
சென்னையில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்: அக்.30-ம் தேதிவரை டைம்!

தொடர்புடைய செய்திகள்